பட்டாணி சாஹீப் என்ற மல்கர்ஷா ஒலியுல்லா பாபா தர்கா
Pattani Sahib/ Malkarshah Oliulla Baba Dargah
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1725, ஐதராபாத் நிசாம்.
கூடுதல் விவரங்கள்
பட்டாணி சாஹீப் என்ற மல்கர்ஷா ஒலியுல்லா பாபா என்பவர் இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஐதரபாத் நிசாமின் படையில் தளபதியாக இருந்துள்ளார். பொது ஆண்டு 1726இல் தன் படைத் தளபதி பொறுப்பிலிருந்து விலகிச் சமூகச் சேவை செய்யும் நோக்கத்தோடு துறவு பூண்டு, இந்த இடத்தை வந்தடைந்தார். அந்தச் சமயம் திண்டுக்கல் பகுதியின் கட்டுப்பாட்டைத் திப்புசுல்தானிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றினர். எனினும் பாபா இவ்விடத்திலேயே தங்கி, ஆங்கிலேயர்களின் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்த இப்பகுதி மக்களுக்கு ஆசி வழங்கி வந்தார். அவரின் மறைவிற்குப் பிறகு அவரை இங்கேயே அடக்கம் செய்து, அன்று முதல் இன்று வரை முஸ்லிம் மற்றும் இந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். சமயங்கள் கடந்த சமூக நல்லிணக்கத்திற்கு இவ்விடம் சான்றாக விளங்குகிறது.
தகவல்
க.த. காந்திராஜன்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை