Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

பெருங்கற்கால குத்துக்கல்

Menhir

அமைவிடத்தின் பெயர்

குன்னூர் குத்துக்கல் முனியாண்டி கோவில்


பண்பாட்டுக் காலம்

பெருங்கற்காலம்


கூடுதல் விவரங்கள்

இங்கு காணப்படும் குத்துக்கல் சுமார் 25 அடி உயரமும், அடிப் பகுதியில் 4 அடி அகலமும் கொண்டது. இது மேற்பகுதியில் குறுகி 2 அடி அகலம் கொண்டுள்ளது. இதன் தடிமன் அரை அடி முதல் ஓரடி வரை உள்ளது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னமான இந்தக் குத்துக்கல், தற்போது உள்ளூர் மக்களால் பழங்கள் வைத்து அபிஷேகம் செயப்பட்டு, வேட்டி மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு முனியாண்டி சாமியாக வழிபடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் குறி சொல்லும் வழக்கம் உள்ளது. இக்கல்லை ’நட்டுக்கல் ஈஸ்வரர்’ என்றும் அழைக்கின்றனர்.


ஊர்

குன்னூர்

மாவட்டம்

விருதுநகர்

கிடைத்த தொல்பொருட்கள்

குத்துக்கல்

தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

முனைவர் போ.கந்தசாமி

முனைவர் போ.கந்தசாமி