லா சலேட் தேவாலயம்
La Salette Church
தேவாலயத்தின் வகை
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
அமைவிடம்
கொடைக்கானல் மலைக் குன்று
ஆலயத்தின் சிறப்பு
கொடைக்கானலில் உள்ள மதர் சலேட் தேவாலயம் பழைமையான தேவாலயமாகும். இந்தத் தேவாலயத்தின் கட்டட அமைப்பு தென்னிந்தியா மற்றும் பிரெஞ்சுக் கட்டடக்கலைகளின் கலவையாகக் காணப்படுகின்றது. தேவாலயத்தின் உள்ளே லா சலேட் என்ற அன்னையின் சிலையும், செயின்ட் ஜோசப்பின் சிலையும் உள்ளன. இவை இரண்டும் பிரான்சில் உள்ள கிரெனோபிள் மறைமாவட்டத்தின் பிஷப்பின் பரிசுகளாகும். தேவாலயத்தின் சாளரங்கள் பிரெஞ்சுப் பெண்மணியான மேடம் கொய்லினின் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஊர்
கொடைக்கானல்
மாவட்டம்
திண்டுக்கல்
வழிபாட்டுக் காலம்
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 14 அல்லது 15 ஆம் தேதிகளில், தேவாலயத்தின் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரமாண்டத் திருவிழா தொடங்குகிறது. இது மதங்கள் மற்றும் சாதிகளைக் கடந்து, தென்னிந்தியா முழுவதிலும் இருந்து வழிபாட்டாளர்களை ஈர்க்கிறது. இந்த விழாவில் சிறப்பு சேவை மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது.
காலம்/ ஆட்சியர்
சிற்பங்கள்
ஆலய வரலாறு / கதைகள்
இந்தத் தேவாலயம் பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டில், கத்தோலிக்கப் பாதிரியார் ஃபாதர் லூயிஸ் செயிண்ட் சீர் என்பவரால் கட்டப்பட்டது. அவர் அன்னை சலேட்டால் நோயிலிருந்து குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தேவாலயத்தின் அமைப்பு
கூடுதல் விவரங்கள்
வரலாற்றுச் சிறப்பு, ஆன்மிகச் சிறப்பு மற்றும் கலைநயம் மிக்க இந்தத் தேவாலயமானது, சுமார் 150 ஆண்டுகள் பழைமையானது. இந்தத் தேவாலயத்தின் கட்டட அமைப்பு தென்னிந்தியா மற்றும் பிரெஞ்சுக் கட்டடக்கலைகளின் கலவையாகக் காணப்படுகின்றது. லாசலேட் தேவாலயத்தை உருவாக்கியவரான செயின்ட் சீர் என்பவரின் உடல் தேவாலயத்தின் முன்பு புதைக்கப்பட்டது. பல காலங்கள் கழித்து, இந்தத் தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது இவர் உடல் இருக்கும் பகுதியின் மேல் கட்டடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
தகவல்
க.த.காந்திராஜன்