Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

புனித இருதய ஆண்டவர் தேவாலயம்

Sacred Heart Church

தேவாலயத்தின் வகை

ரோமன் கத்தோலிக்


வேறு பெயர்கள்

சேக்ரட் ஹார்ட் சர்ச் (Sacred Heart Church), இடைக்காட்டூர் தேவாலயம், திரு இருதய ஆண்டவர் திருத்தலம்


அமைவிடம்

இடைக்காட்டூர்


ஊர்

இடைக்காட்டூர்

மாவட்டம்

சிவகங்கை

ஆலயத்தின் சிறப்பு
இடைக்காட்டூர் தேவாலயம், பிரான்சு நாட்டில் உள்ள புகழ்பெற்ற ரீம்ஸ் கதீட்ரலின் பிரதியாகக் கருதப்படும் ஓர் அற்புதமான தேவாலயம் ஆகும். இது கோதிக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது.
வழிபாட்டுக் காலம்
ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு, புனித வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1894
சிற்பங்கள்
பலிபீடத்தில் காணப்படும் சுதை வேலைப்பாடுகள், புனிதர்கள், தேவதூதர்கள், புனித ஜோசப் மற்றும் தாயின் உருவங்கள் மிகவும் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டு, பிரெஞ்சுக் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன
ஆலய வரலாறு / கதைகள்
பொது ஆண்டு 1894ஆம் ஆண்டில் பிரெஞ்சு மதப் போதகர் பெர்டினாண்ட் செல் (Fr. Ferdinand Celle SJ) என்பவரின் தீவிர முயற்சியால் இந்தத் தேவாலயம் உருவானது. இந்தத் தேவாலயம் ஒரு பிரெஞ்சு ஆங்கிலிக்கன் பெண்மணியான மேரி அன் (Mary Anne) என்பவரின் நன்கொடையைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இவர், ஒருசமயம் மருத்துவர்களே குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, மூன்று ரோமன் கத்தோலிக்க பெண்களின் ஆலோசனையின்படி இயேசுவின் புனித இதயத்தை 9 நாட்கள் பிரார்த்தனை செய்தார் (நொவேனா). பின்பு அவர் குணமடைந்தார். இந்த அதிசயத்தைக் கண்டு நெகிழ்ந்த அவர், கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக, இடைக்காட்டூரில் இயேசுவின் புனித இதய தேவாலயத்தைக் கட்டுவதற்கு 2,000 ஃபிராங்குகள் (பிரஞ்சு பணம்) நன்கொடையாக வழங்கினார். மேலும் இந்தத் தேவாலயம், பிரான்சில் உள்ள ரீம்ஸ் கதீட்ரலைப் போல அமையவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேவாலயத்தின் அமைப்பு
இடைக்காட்டூரில் அமைந்துள்ள இந்தப் புனித இருதய ஆலயம் கோதிக் கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் காணப்படும் ரீம்ஸ் தேவலாயத்தின் பிரதி ஆகும். இந்தத் தேவாலயம் தேவதூதர்களால் கட்டப்பட்டது என்று நம்மப்படுவதால் போதகர் பெர்டினாண்ட் செல், தேவாலயத்தின் உள்ளும் புறமும் 153 தேவ தூதர்களின் உருவங்களை வடிவமைத்து உள்ளார். இந்தத் தேவாலயத்தின் பீடத்தில் 40 புனிதர்களின் போதனைகள் பொறிக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்தத் தேவாலயத்தின் வெளிப்புறம், இருநூற்றுக்கு மேற்பட்ட விதவிதமான செங்கற்களாலும், ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு நுழையும் போது, கோதிக் வளைவுகள், மாலைகள், பூக்கள், மணிகள், டெரகோட்டா வேலைப்பாடுகள் ஆகியவை பார்வையாளர்களைக் கவருகின்றன. சிறிய செங்கல் தூண்களால் அலங்கரிக்கப்பட்ட சாரளங்கள் ஹாலோ (hollow) வேலைப்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறிய செங்கல் தூண்கள் வெப்பமான காலநிலையின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி வேலைப்பாடுகளில் இயேசு பெருமானின் சிலுவைப் பயணத்தைச் சித்தரித்துள்ளனர். இங்கு இயேசு, அவரது தந்தை யோசேப் (ஜோசேப்), தாய் மரியாள் (மேரி), பெண் சீடர் மரியாள் மக்தலேனா (மேரி மாக்டலீன்), புனிதர்கள் மற்றும் பிற தேவதூதர்களின் திரு உருவச்சிலைகள் பிரெஞ்சு நாட்டுக் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
தேவாலயத்தின் நடுவில் அமைந்துள்ள பிரதானப் பீடம், கோதிக் முகப்பின் முழுமையான வடிவமைப்புடன், 45 அடி உயரத்திலுள்ளது. இப்பீடம் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் கிறிஸ்தவக் கோட்பாட்டைக் காட்டுகிறது. கடவுள் தனது மகன் இயேசுவைக் கையால் பிடித்துத் தேவதூதர்களால் சூழப்பட்ட பரிசுத்த ஆவியுடன் தோன்றும் இந்தக் காட்சி, கிறிஸ்தவத் தத்துவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது. இடைக்காட்டூர் தேவாலயம் மத அடிப்படையில் மட்டுமல்லாமல், கலை மற்றும் கட்டடக்கலையின் அடிப்படையிலும் பார்வையாளர்களுக்கு அழகிய அனுபவத்தை வழங்குகிறது.
தகவல்

முனைவர் முனீஸ்வரன்

குறிப்புகள்
சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 12 https://www.tamilnadutourism.tn.gov.in/tamil/destinations/idaikattur-church
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மானாமதுரை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மானாமதுரை
புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

No media Files