Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

களரித் திருவிழா

Kalari Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

பிள்ளைப்பேறு, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட பல நன்மைகள் கிடைப்பதாகவும், தீராத நோய், தீய ஆவியின் தாக்குதல் ஆகியவற்றில் இருந்து விடுலை கிடைப்பதாகவும் நம்புகின்றனர்


நடைபெறும் இடம்

அருள்மிகு முத்து மாகாளியம்மன் திருக்கோயில்


நடைபெறும் தருணங்கள்

புரட்டாசி, 8 நாட்கள் காலை முதல் இரவு வரை திருவிழாக்கள் நடைபெறுகின்றன


ஊர்

கிழவனேரி

மாவட்டம்

விருதுநகர்

பாலினம்
பெண்
விழாவின் வரலாறு / கதை
இக்கோயிலில் பலகாலமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் தொடர்ந்து 8 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழாவின் போது இக்கோயிலைக் குலதெய்வமாக வணங்கி வருபவர்களும் பிற சுற்றுப்புற ஊர்மக்களும் இணைந்து வழிபாடு நடத்துகின்றனர்.
விழாவின் தொன்மை
சுமார் 300 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறுவதாகக் கருதப்படுகிறது.
விரத முறைகள்
நோன்பு முறைகளில் முதலாவதாகக் காப்புக் கட்டுதல். காப்புக் கட்டி எட்டு நாட்கள் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. நோன்பு நாட்களில் இருவேளை மட்டுமே உணவு அருந்துகின்றனர். புலால் உணவு உண்பதில்லை. நோன்பு இருப்பவர்கள் வெளியூரில் சென்று தங்கக்கூடாது. ஒரு வாரக் காலம் பக்தியோடு நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே உள்ளது.
பலியிடல்
களரியில் தொடக்க நிகழ்வாக சக்தி கிடாய் வெட்டப்படுகிறது. சக்தி கிடாயாகச் செம்மறி ஆடு பலியிடப்படுகிறது.
நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன் செலுத்துவோர் வெள்ளாடு, சேவல் போன்றவற்றைப் பலியிடுதல், தீச் சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், மண்பொம்மைகள் செய்து வைத்தல், அன்னதானம் வழங்குதல் போன்றவற்றைச் செய்கின்றனர்.
குறி சொல்லும் முறை
தொடக்கத்தில் முத்துப் போட்டுக் குறி சொல்லி வந்தனர். இப்போது கோயில் பூசாரி பூப் போட்டு அருள்வாக்குச் சொல்கிறார்.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
பாரம்பரியமாக இங்கு அரிச்சந்திரன் நாடகம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
கோயில் வழிபாட்டில் முதல் நிகழ்ச்சியான காப்புக் கட்டுதலைத் தொடர்ந்து, நோன்பிருத்தல், அம்மன் ஊர்வலம், சக்தி கிடாய் வெட்டி வழிபாடு தொடங்குதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், அன்னதானம் வழங்குதல், நவீனத் திரைப்படம், இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
சிறப்பம்சங்கள்
படையல்: தேங்காய், வாழைப்பழம், பூ மாலை, பொங்கல் மற்றும் ஆடு கோழி வெட்டப்பட்டுச் செய்யப்படும் உணவு உள்ளிட்டவை முக்கியப் படையல்களாகப் படைக்கப்படுகின்றன.

ஊர்வலம்: திருவிழாவின் போது அங்காள ஈஸ்வரி அம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பூசாரி வீட்டில் வைக்கப்பட்டுத் திருவிழாவின் முதல் நாள் மீண்டும் கோயிலுக்கு ஊர்வலமாக ஊர்மக்களால் எடுத்து வரப்படுகிறது. பூசாரியே அம்மன் பெட்டியைக் கொண்டு வருவதால் அதற்கென்று தனி வாகனம் இல்லை.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

காணொலி

முனைவர் சி.செல்லப்பாண்டியன்