Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

விடுகதைகள்

Riddles

கதைச் சொல்லியின் விவரம்

1.பரிமளம், (பெண்), 72 வயது,

2.கணபதி பழனியம்மாள், (பெண்),70 வயது,

3.சி.பஞ்சவர்ணம், (பெண்),65 வயது,

4. நே.முத்துராக்கு (பெண்), 60 வயது,

5.லெட்சுமி (பெண்), 50 வயது.


கதை வடிவம்

வாய்மொழி


கூடுதல் விவரங்கள்

ஓரிரு வரிகளில் ஒரு பொருளை மறைபொருளாக விவரித்து (அதாவது நேரடியாக விவரிக்காமல்) தொடுக்கப்படும் புதிரே விடுகதை எனப்படும். விடுகதைகள், பொழுதுபோக்கு வடிவமாகவும், அறிவை வளர்க்கவும், சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுகின்றன. விடுகதைகளை உண்மை விடுகதைகள், கதை அடிப்படையிலான விடுகதைகள், கணக்கு விடுகதைகள், எழுத்திலக்கிய விடுகதைகள் என்று பலவகைப்படுத்தலாம். விடுகதை என்பது நாட்டுப்புற மக்களின் சிந்தனைத் திறனுக்குத் தக்க சான்றிதழ் ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஓன்றிணைக்கும் பொழுதுபோக்கு அம்சமாக விடுகதைகள் உள்ளன.

கேட்பொலி கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடுகதைகள் பின்வருமாறு (refer audio file):

1. வண்ணான் துவைக்காத வெள்ளை, மழை பெய்யாத தண்ணீர். அது என்ன?

பதில் - தேங்காய் பருப்பு மற்றும் தேங்காயிலுள்ள தண்ணீர்.

2. ஓடும் சங்கிலி, ஒதுங்கும் சங்கிலி, பள்ளத்தை கண்டால் பதியும் சங்கிலி. அது என்ன?

பதில்- தண்ணீர்


ஊர்

ஆலமரத்துப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

வெ.நாகஜோதிகா

கேட்பொலி